இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதை பி.சி.சி.ஐ.யின் செயலாளர் தேவஜித் சைக்யா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது,"பி.சி.சி.ஐ. யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்றார்.
அந்தமான், நிக்கோபர் தீவுகளில் இருந்து கிரிக்கெட் சங்கத்திற்கு இணை உறுப்பினர் பொறுப்பு வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பி.சி.சி.ஐ. இணை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
மேலும், ஐ.பி.எல். தலைவர் பதவி உள்பட ஐ.பி.எல். நிர்வாகக்குழுவின் 2 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.எல். தலைவராக அருண் தூமல் இருக்கிறார்.
இதற்கான விண்ணப்பங் களை தாக்கல் செய்வ தற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும்.
இந்த 2 பதவிகளுக்கான தேர்தலும் போட்டியின்றி நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.