விளையாட்டு

மகள் மற்றும் வளர்ப்பு நாயுடன் 'தல' டோனி தந்தையர் தின வாழ்த்து- வீடியோ வைரல்

அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.

தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.