விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த் கிடாம்பி

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மாலை மலர்

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் ஜேசன் குணவான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.