அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் மேட்டியா பெலூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரிட்ஸ் 6-0, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார். 3வது செட்டை 7-6 (7-3) என ஸ்வரேவ் போராடி வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் 4வது செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ஸ்வரேவ் 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், முதல் சுற்றிலும் அலெக்சாண்டர் ஸ்வரேவ் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றார்.
கடந்த இரண்டு சுற்றுகளிலும் சேர்த்து ஸ்வரேவ் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.