டென்னிஸ்

French Open டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினர் ஸ்வரேவ், கேஸ்பர் ரூட்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மெட்ஜிடோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT