டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வரேவ், ரபேல் ஜோடார்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கேமரூன் நூரி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் 7-5, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபவலோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள 3வது சுற்றில் ரபேல் ஜோடார், சிலியின் அலெஜாண்ட்ரோ உடனும், ஸ்வரேவ் பிரான்சின் டெரன்ஸ் ஆட்மனே உடனும் மோதுகின்றனர்.