டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் நேரடியாக தகுதிபெற்றார்.

இன்று நடந்த 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சீனாவின் வூ யீபிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT