டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ்நெதர்லாந்தின் பொடிக் வான் டே உடன் மோதுகிறார்.

இதேபோல், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷியாவின் கரண் கச்சனாவ், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, மற்றொரு வீரரான அலெக்ஸ் மைக்கல்சன் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT