அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று காலை நடந்த போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (7-3), 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபவலோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள 4வது சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் லூசியானா டார்டெரியுடனும், பென் ஷெல்டன் கிரீசின் சிட்சிபாஸ் உடனும் மோதுகின்றனர்.