ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் போட்டியில் ஸ்வரேவ், ஆர்தர் பில்ஸ் உடன் மோதவுள்ளார்.