டென்னிஸ்

சிட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்டு கிளாஸ்பூல் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.

இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.