டென்னிஸ்

மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது பாம்ப்ரி ஜோடி

ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருக்கிறது.இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

மாலை மலர்

மல்லோர்கா:

ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.

இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றது. இந்தப் போட்டியில் பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 9 நிமிடம் மட்டும் நடந்தது.