உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் 8-ம் நிலை வீராங்கனையான நோஸ்கோவாவை- தரநிலைப் பெறாத ஸ்விடோலினா எதிர் கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-2, 6-1 என எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் 5-ம் நிலை வீராங்கனையான பெகுலா- 3-ம் நிலை வீராங்கனையான ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார். இதில் ஆண்ட்ரீவா 6-3, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார்.
இறுதிப் போட்டியில் ஸ்விடோலினா- ஆண்ட்ரீவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் இன்று தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.