சானியா மிர்சா 
டென்னிஸ்

விம்பிள்டன் - கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது

சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.

மாலை மலர்

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.

இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.