டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கனடா வீராங்கனை

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ அரையிறுதியில் வென்றார்.

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டோரியா எம்போகோ, லாத்வியாவின் ஜெலெனா ஆஸ்டபென்கோ உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய விக்டோரியா எம்போகோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

SCROLL FOR NEXT