டென்னிஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜார்ஜியா வீரர் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிட்சிபாஸ் 2வது செட்டை 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜார்ஜியா வீரர் 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT