டென்னிஸ்

சிட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சிட்சிபாஸ் 6-3 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அலெக்ஸ் டி மினார் 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் கிரீசின் சிட்சிபாஸ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடந்து வருகிறது.