டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: முன்னணி வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் சிட்சிபாஸ் 6-3 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.