டென்னிஸ்

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெருவின் இக்னசியோ பியூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மேனுவல் செரண்டலோ 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் செனக் கோலாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.