டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சிட்சிபாஸ் வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சில் வேலண்டின் ரோயர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 7-6 (7-4), 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள 2வது சுற்றில் சிட்சிபாஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதுகிறார்.