டென்னிஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கஜகஸ்தானின் மிக்கைல் குகுஷ்கின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-1, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதியில் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT