சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டாமி பால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை 4-6, 7-6 (8-6), 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, போர்ச்சுகலின் ஜெய்மி பாரியா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய லாரன்சொ முசெட்டி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிராண்டன் நகஷிமா மற்றும் பிரான்சிஸ் டியாபே ஆகியோரும், இத்தாலியின் பிளேவியோ கோபோலியும், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.