டென்னிஸ்

Stuttgart Open டென்னிஸ்: காலிறுதியில் தியாபே அதிர்ச்சி தோல்வி

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜிரி லெஹெகா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT