ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-4, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7, 7-6 (16-14), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் செக் குடிய்ரசின் ஜிரி லெஹெகாவை போராடி வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான டெய்லர் பிர்ட்ஸ் உடன் மோதுகிறார்.