டென்னிஸ்

சிட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ஆஸ்திரேலியாவின் வுகிக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சஜாரி சஜ்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் டெரன்ஸ் ஆத்மனேவிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.