டென்னிஸ்

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர்

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.

ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில்அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெசென்கோ, அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, பிரான்சின் யூகோ ஹம்பர்ட், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT