டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.இதில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான எமிலோ நவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.