டென்னிஸ்

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம் வீரர்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன், மொனாகோவின் வேலன்டின் வெசாரட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கொலிக்னன் 7-6 (9-7) என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மொனாகோ வீரர் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-5 என வென்ற கொலிக்னன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.