டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ஸ்விடோலினா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடைபெற்று வருகிறது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது அரையிறுதி ஆட்டம் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை நடந்த காலிறுதி சுற்று போட்டியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரஷியாவின் எகர்டினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட எலினா ஸ்விடோலினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-0, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.