டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், சக்காரி முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. போலந்தின் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்யாடெக் 6-1 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.