டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதி வாய்ப்பை இழந்த ஒசாகா, ஸ்வியாடெக்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதி வாய்ப்பை இழந்தனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நவோமி ஒசாகா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஜெங் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதியில் குயின்வென் ஜெங் ரிபாகினாவை எதிர்கொள்கிறார்.

SCROLL FOR NEXT