டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவி ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-4, 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் ரிபாகினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 4-1 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது காயம் காரணமாக ரிபாகினா போட்டியில் இருந்து விலகினா. இதனால் ஸ்வியாடெக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடனும் மோதுகின்றனர்.