டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், ஸ்வரேவ்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் செக் வீரர் ஜாகுப் மென்சிக்கை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.