மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்கை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், ஸ்வரேவை சந்திக்கிறார்.