டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், ரூப்லெவ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மியோமிர் கெமனோவிச்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT