ஜானிக் சின்னர், டேனில் மெத்வதேவ் 
டென்னிஸ்

Miami Open Tennis | சின்னர், மெத்வதேவ் 2வது சுற்றில் வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மாலை மலர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர், போஸ்னியாவின் டமீர் டுமூர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-7 (10-12), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரேய் சகமோட்டோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.