கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அர்ஜென்டினாவின்
ஜுவான் மேனுவல் செரன்டலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் முதல் இரு செட்களை 6-3, 6-2 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா வீரர் அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 7-5, 6-1, 6-1 என போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே, முன்னணி வீரரான டேனில் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.