ஸ்பெயினில் நடந்த மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். சின்னர் வெல்லும் முதல் மேட்ரிட் ஓபன் பட்டம் இதுவாகும்.
கடந்த ஆண்டு பாரீஸ் மாஸ்டர்ஸ், இண்டியன்வெல்ஸ், மியாமி ஓபன், மான்டே கார்லோ மற்றும் தற்போது மேட்ரிட் ஓபன்
என மாஸ்டர்ஸ் டென்னிஸ் (Masters 1000) வரலாற்றில் தொடர்ந்து 5 கோப்பைகளை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியிப்பட்ட டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.