ஜானிக் சின்னர் 
டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர், ஆர்தர் பில்ஸ்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 7-6 (7-0) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செக் வீரர் ஜிரி லெஹெகாவை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.