மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் செட்டை 6-1 என வென்றார். இதற்கு பதிலடியாஜ 2வது செட்டை 7-6 (7-3) என தாமஸ் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சின்னர் 6-3 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.