டென்னிஸ்

பெர்லின் ஓபன் தொடரின் தொடக்க சுற்றில் செரினா வில்லியம்ஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வி

குயின்ஸ் கிளப்பில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இது வில்லியம்ஸின் இரண்டாவது போட்டியாகும்.

பெர்லின் ஓபன் போட்டியின் தொடக்கச் சுற்று இரட்டையர் ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் கம்பேக் கொடுத்த வில்லியம்ஸ் தனது முதல் போட்டியில் சறுக்கியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குய்லியானா ஆல்மோஸ் மற்றும் எரின் ரவுட்லிஃப் ஜோடி, வில்லியம்ஸ் மற்றும் அவரது கூட்டாளி கரோலினா முச்சோவாவை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

கடந்த வாரம் லண்டனில் உள்ள குயின்ஸ் கிளப்பில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இது வில்லியம்ஸின் இரண்டாவது போட்டியாகும்.

இந்த போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும், ரசிகர்களிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டும், அன்பும் குறையவில்லை. 2022 அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு வில்லியம்ஸ் பங்கேற்ற முதல் தொழில்முறை ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

44 வயதான வில்லியம்ஸ், ஸ்டெஃபி கிராஃப் ஸ்டேடியத்தின் மைய ஆடுகளத்திற்குள் பெரும் ஆரவாரத்துடனும் கைதட்டலுடனும் வரவேற்கப்பட்டார்.