டென்னிஸ்

இது அற்புதமான டென்னிஸ்: காலிறுதியில் போராடிய அல்காரசை பாராட்டிய சச்சின்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இரு வீரர்களின் கடின உழைப்பைக் கண்டு வியந்தார் சச்சின் டெண்டுல்கர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று காலை நடந்த காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார். இதற்கு பதிலடியாக ஆடிய பென் ஷெல்டன் அடுத்த இரு செட்களை 6-1, 6-3 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 4வது செட்டை 6-1 என வென்றார்.

அல்காரஸ் போராடி தோல்வி

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டிலும் அல்காரஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் அதிரடியாக ஆடிய பென் ஷெல்டன் 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சச்சின் பாராட்டு

இந்நிலையில், இரு வீரர்களின் கடின உழைப்பைக் கண்டு வியந்த சச்சின் டெண்டுல்கர், இது ஒரு அற்புதமான டென்னிஸ் என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காயத்தில் இருந்து மீண்டு வந்து தோல்வியைச் சந்தித்த அல்காரசுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT