சபலென்கா, ரிபாகினா 
டென்னிஸ்

Miami Open Tennis | 4வது சுற்றுக்கு முன்னேறினர் சபலென்கா, ரிபாகினா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3வது சுற்று போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கேடி மெக்னல்லி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கோஸ்ட்யூக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.