அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் 2வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் பொலினா லாட்சென்கோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான சோபியா கெனினை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.