அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமீலா ரகிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டசை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.