டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா, நவோமி ஒசாகா 2வது சுற்றில் வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா தகுதி பெற்றனர்.

இன்று நடந்த 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ரினேடா சராசுவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மரியா டிமோபேவாவை வீழ்த்தி முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT