டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவா மோதல்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. சபலென்கா அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவாவை இன்று சந்திக்கிறார்.

மாலை மலர்

ரியாத்:

54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா, இத்தாலியின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ரிபாகினா, பெகுலாவை சந்திக்கிறார். இரண்டாவது அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவாவை சந்திக்கிறார்.