மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹெய்லி பாப்டிஸ்ட்
அடுத்த இரு செட்களை 6-2, 7-6 (8-6) என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.