கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் டயானா சினைடர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சினைடர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-5, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் டயானா சினைடர், போலந்தின் மஜா சவாலின்ஸ்கா உடன் மோதுகிறார்.