டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

கடந்த மார்ச் மாதம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது 4-வது சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை நடந்த 4-வது சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்த அரினா சபலென்கா, ரஷியாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

சபலென்கா தோல்வி

இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 2வது செட்டை 6-4 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் முன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

திணறும் சபலென்கா

கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.